கிளிநொச்சி பொதுச் சந்தையில் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி(காணொளி)

386 0

kilinochchiமறைந்த தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு கிளிநொச்சி பொதுச் சந்தையில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் மூன்று மணிக்கு பொதுச் சந்தையில் அனைத்து வியாபார நிலையங்களை மூடியும், வியாபார நிலையங்களுக்கு முன் கறுப்பு கொடிகளையும் பறக்கவிட்டும் வர்த்தகர்கள் தமது துக்கத்தை வெளிப்படுத்தியதோடு, சந்தை வளாகத்தில் ஒழுங்குசெய்யப்பட்ட இடத்தில் ஜெயலலிதாவின் படம் வைக்கப்பட்டு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, சுடரேற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

சந்தை வர்த்தக சங்கத்தின் தலைவர் யேசுராஜன் தலைமையில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வில், சந்தையின் அனைத்து வர்த்தர்களும் உணர்வு பூர்வமாக கலந்துகொண்டு தமது அஞ்சலியைச் செலுத்தினர்.