சிறிமா – சாஷ்த்திரி ஒப்பந்தத்தின் கீழ், இலங்கையின் மலையகப்பகுதியில் இருந்து இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட தமிழர் ஒருவர், இந்தியாவின் மாவட்ட ஆட்சியாளராக பதவி ஏற்கவுள்ளார்.
த டெக்கான்கொரனிக்கல் இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
இன்பசேகர் காளிமுத்து என்று அவர், இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட நிலையில் கொடைக்கானல் பகுதியில் வசித்துவந்த குடும்பம் ஒன்றில் பிறந்தார்.
அவர் இந்திய நிர்வாக சேவைகளில் சித்திபெற்றதன் ஊடாக இந்த பதவியில் நியமிக்கப்படவுள்ளார்.
இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு சென்ற நிலையில், இவ்வாறு ஐ.ஏ.எஸ் எனப்படும் இந்திய நிர்வாக சேவையின்கீழ் மாவட்ட ஆட்சியாளராக பதவி ஏற்கும் முதல் நபர் அவராவார்.
அவர் கேரளாவில் கோழிகோடு பகுதியில் மாவட்ட ஆட்சியாளராக பதவி வகிக்கவுள்ளார்.