கொழும்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்தை தாண்டியது

200 0

இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர் களாக அடையாளம் காணப்பட்ட 594 பேரில் 253 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரி வித்துள்ளது.

அதில் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 253 பேர் உட்பட கொவிட் -19 இரண்டாவது அலையால்  கொழும்பு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 16 ஆயிரத்து 109 ஆக உயர்ந்துள்ளது.

அதன்படி வெலிக்கடை சிறைச்சாலையில் 19 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பொரளைப் பகுதியில் 62 பேர், கொம்பனி வீதி பகுதியில் 30 பேர், புளுமென்டல் பகுதியில் 27 பேர் மற்றும் மட்டக்குளி பகுதியில் 22 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதன்படி ஒக்டோபர் 04 ஆம் திகதியிலிருந்து தற்போது வரை கொழும்பு மாவட்டத்தில் தொற்றாளர் எண்ணிக்கை 16 ஆயிரத்து 109 ஆக உயர்ந்துள்ளது.
இலங்கையில் நேற்றைய தினம் அடையாளம் காணப் பட்ட  594 கொரோனா தொற்றாளர்களில் 124 பேர் கம்பஹா மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் .
அதில் மஹர சிறைச்சாலையில் 23 பேர்   அடையாளம் காணப்பட்டுள்ளனர் .
கண்டி மாவட்டத்தில் 62 பேர், களுத்துறை மாவட்டத்தில் 49 பேர்,  இரத்தினபுரி மா வட்டத்தில் 16 பேர், அம்பாந்தோட் டை மாவட்டத்தில் 15 பேர், திருகோணமலை மாவட்டத்தில் 14 பேர் மற்றும் மாத்தறை மாவட்டத் தில் 13 பேர் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.
குருணாகல் மாவட்டத்தில் 12 பேர்,  அம்பாறை மாவட்டத் தில் 08 பேர், கேகாலை ,  புத்தளம் மா வட்டத்தில் 07 பேர் மற்றும்  காலி மாவட்டத்தில் 06  பேர் அடையாளம் காணப்பட்டனர்.
நுவரெலியா மாவட்டத்தில் 03 பேர், அனுராத புர மாவட்டத் தில் 03 பேர்  மற்றும் மொனராகலை மாவட்டத்தில்  ஒருவர், வெளி நாட்டிலிருந்து வருகை தந்த இருவர்  நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என கொவிட்-19 தடுப்பிற்கான தே சிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.