வவுனியாவில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது
மறைந்த தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவிற்கு வவுனியா உள்ளுர் விளைபொருள் விற்பனையாளர் சங்கத்தின் ஏற்பாட்டில், வவுனியா தினச்சந்தையில்அச்சங்கத்தின் வர்த்தகர்கள் இணைந்து சுடரேற்றி, மலர் அஞ்சலி செலுத்தியுள்ளார்கள். உள்ளுர் விளைபொருள் விற்பனையாளர் சங்கத் தலைவரின் தலைமையில், ஜெயலலிதாவின் ஆன்மா சாந்தியடைவதற்காக மௌனப் பிரார்த்தனையும் இடம்பெற்றது.
வடமாகாண சபை உறுப்பினர் செ.மயூரன், வவுனியா வர்த்தகர் சங்கத் தலைவர் திரு.ரீ.கே. இராஜலிங்கம், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் எஸ்.சந்திரகுமார், செயலாளர் மாணிக்கம் ஜெகன், உள்ளுர் விளைபொருள் விற்பனையாளர் சங்கச் செயலாளர், உறுப்பினர்கள பொதுமக்கள் என பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.