வவுனியா பெரியதம்பனை கிராமிய சுகாதார நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டது.
வட மாகாண சுகாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட இக் கட்டிடமானது வட மாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கததினால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட பெரியதம்பனை கிராமமானது நீண்ட காலமாக சுகாதார வசதிகள் அற்ற நிலையில் காணப்படுவதாக சுகாதார அமைச்சின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதையடுத்தே, இச் சுகாதார நிலையம் அமைக்கப்பட்டிருந்தது.
இக் கிராமிய சுகாதார நிலையத்தினால் பிரமனாளங்குளம், பண்டிவிரிச்சான் பெரியதம்பனை ஆகிய கிராம மக்கள் பயன்பெறக்கூடியதாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.