வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட தாழமுக்கம் வலுப்பெற்று புயலாக மாற்றம்

355 0

pujalதென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட தாழமுக்கம் வலுப் பெற்று புயலாக மாற்றமடைந்துள்ளது.வர்தா என இந்த புயலுக்கு பெயரிடப்பட்டுள்ளதாக இந்திய வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.இந்த புயல் தாக்கத்தின் காரணமாக ஆந்திர கடலோர பகுதிகளில் எதிர்வரும் நான்கு நாட்களுக்கு தொடர்ந்து கடும் மழையுடன் கூடிய வானிலை நிலவக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த வாரம் வலுவிழந்த நடா புயலுக்கான பெயரை ஓமன் நாடு சூட்டியிருந்தது.அத்துடன், தற்போது உருவாகியுள்ள வர்தா புயலுக்கான பெயரை பாகிஸ்தான் சூட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இந்த புயலின் தாக்கம் காரணமாக இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் கடும் மழையுடன் கூடிய வானிலை நிலவக்கூடும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.அத்துடன், நாட்டை சூழவுள்ள கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகம் சற்று அதிகமாக காணப்படுவதுடன், கடல் கொந்தளிப்பாகவும் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அதிகாரி கே.சூரியகுமார் தெரிவித்துள்ளார்.இதேவேளை, இந்து சமுத்திர பிராந்தியம் மற்றும் வங்காள விரிகுடாவை அண்மித்த பகுதியில் மற்றுமொரு புயல் உருவாகும் பட்சத்தில் அதற்கு ஆசிரி என பெயர் சூட்டப்படவுள்ளது.இதற்கான பெயரை இலங்கை முன்மொழிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.