இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தோனேசியாவின் அச்சே மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் இலங்கையர்கள் எவரும் பாதிப்பிற்குள்ளாகவில்லை என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இந்தோனேசியாவிற்கான இலங்கைத் தூதரகத்தை மேற்கோள்காட்டி தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் வெளிவிவகார அமைச்சு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இந்தோனேஷியாவின் அச்சே மாகாணத்தில் நேற்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 97 பேர் உயிரிழந்துள்ளதுடன், 600 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
இதேவேளை, இந்தோனேசியாவின் அச்சே மாகாணத்தில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுடன் இலங்கையர்களும் துயரைப் பகிர்ந்துகொள்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அத்துடன் நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக பிரார்த்திப்பதாகவும் ஜனாதிபதி தமது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.