கொழும்பு துறைமுகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று அதிகாலை கொழும்பு துறைமுகத்தின் ஓய்வறையில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, 38 வயதான நபர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தீ விபத்தில் மற்றுமொரு நபர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், தீயை துறைமுக தீயணைப்புப் படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீ விபத்திற்கான காரணங்கள் இன்னமும் கண்டறியப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.