முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்குப் பகுதியில் கரைதுறைப்பற்று பிரதேச சபைக்கு சொந்தமான பொதுச்சந்தை வளாகத்தில் இறுதி யுத்த காலப்பகுதியில் புதைக்கப்பட்ட இரண்டு இரும்புப் பெட்டகங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தை வளாகத்தில் நிர்மாணம் ஒன்றுக்காக பிரதேச சபையால் கிடங்கு வெட்டும் போது குறித்த பெட்டகங்களை கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தொடர்ந்து பிரதேச சபையினர் முல்லைத்தீவு பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து நேற்று பொலிஸார் நீதிமன்ற அனுமதியுடன் பிரதேச சபையினரின் உதவியுடன் நிலத்தை அகழ்ந்து குறித்த பெட்டகங்களை மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மீட்கப்பட்ட பெட்டகங்கள் எதுவும் அற்ற நிலையில் காணப்பட்டதாகவும் இந்த பெட்டகத்தை ஏற்கனவே யாரோ தோண்டி எடுத்து அதிலுள்ளவற்றை களவாடியிருக்கலாமெனவும் சந்தேகிக்கும் பொலிசார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மீட்கப்பட்ட பெட்டகங்களை நேற்று மாலை முல்லைத்தீவு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.