உதய கம்மன்பிலவின் கட்சியைத் தடை செய்ய வேண்டும்-ராஜித

325 0

rajithaஉதய கம்மன்பிலவின் புதிய ஹெல உறுமயவை முதலில் தடை செய்ய வேண்டும் என்று சுகாதார துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த ராஜித சேனாரத்ன தடை செய்யப்பட வேண்டியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அல்ல என்றும், உதய கம்மன்பிலவின் புதிய ஹெல உறுமயவே தடை செய்யப்பட வேண்டும் என்று கூறினார்.

நாட்டில் இனவாதத்தை கக்கும் கட்சியே புதிய ஹெல உறுமய.

எனவே தடை செய்வதாயின் முதலில் புதிய ஹெல உறுமயவை தடை செய்ய வேண்டும்.

என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.