முகநூல் ஊடாக ஜனாதிபதிக்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட இளைஞரை எதிர்வரும் 15ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க, கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சந்தேகநபரான குறித்த 26 வயது இளைஞர், இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நிதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்நிலையில் குறித்த இளைஞரை எதிர்வரும் 15 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை கைதுசெய்யப்பட்ட இளைஞர் காலி – ரத்கம பகுதியைச் சேர்ந்தவரென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.