தடுப்பூசிகளின் விளைவுகள் குறித்து ஒரு துல்லியமான மதிப்பீடு இருக்க வேண்டும்

264 0

கொவிட் 19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் மருந்துகள் அல்லது தடுப்பூசிகள் சரியான முறையில் மருத்துவ ரீதியாக உறுதிப்படுத்தப்படாவிட்டால் அதன் விளைவுகள் பாதகமாக அமையும் என்று இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஒரு மருத்துவரினால் பரிந்துரைக்கப்படும் எந்தவொரு மருந்தும் அல்லது தடுப்பூசியும் மனித உடலுக்கு தீங்கு விளைவிப்பதில்லை என்பதை உறுதிப்படுத்துவது அவசியம் என்றும் குறிப்பிட்டார்.

இதனால் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் பக்க விளைவுகள் குறித்து ஒரு துல்லியமான மதிப்பீடு இருக்க வேண்டும். நோயை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் எப்போதும் சரியாக இருக்க வேண்டும். Covid -19 வைரசுக்கு எதிரான தடுப்பூசிகள் இன்னும் மருத்துவ பரிசோதனைகளிலேயே உள்ளமையால் இது தொடர்பாக நிபுணர்களின் கருத்து கோரப்பட்டது.

கொவிட் வைரஸுக்கு எதிராக தற்போது உலகில் உள்ள ஆக்ஸ்பர்ட், பைசர், ஸ்புடினிக் மற்றும் சினொவெக் போன்ற நான்கு வகையான தடுப்பூசிகள் சம்பந்தமாகவும் கவனம் செலுத்தப்பட்டது. இந்தத் தடுப்பூசிகளில் வைரஸுக்கு எதிரான எதிர்விளைவுகளின் சதவீதம், சேமிப்பு வெப்பநிலை மற்றும் அது சம்பந்தமான செலவு போன்ற விடயங்கள் இங்கே விவாதிக்கப்பட்டன. அத்துடன் இந்த தடுப்பூசிகள் குறித்து மேலதிக ஆய்வுகள் நடத்தப்பட்டு நிபுணர்களின் கருத்துக்களை சமர்ப்பிக்குமாறும் இராஜாங்க அமைச்சர் இதன்போது மேலும் தெரிவித்தார்.