யாழில் பொலிஸ் திணைக்களத்தினால் நடமாடும் சேவை(படங்கள்)

306 0

jaffnaயாழ்ப்பாண மாவட்டத்தில் பொலிஸ் திணைக்களத்தின் 150வது ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்பட்டுவந்த நடமாடும் சேவை இன்று வடமராட்சியில் நிறைவுபெற்றது.

பொலிஸ் திணைக்களத்தின் நடமாடும் சேவையின் நிறைவு நிகழ்வு இன்று வடமராட்சி நெல்லியடிப் பொலிஸாரினால் நடாத்தப்பட்டுயள்ளது.

கரவெட்டி மூத்த விநாயகர் ஆலயத்தில் நடாத்தப்பட்ட விசெட பூசை வழிபாட்டில் யாழ்ப்பாண பிரதிப் பொலிஸ்மா அதிபர், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டதைத் தொடர்ந்து நெல்லியடியில் பொலிஸாரினால் இரத்ததான நிகழ்வு நடாத்தப்பட்டது.

வடமராட்சி நெல்லியடி பொலிஸாரினால் நடாத்தப்பட்ட நடமாடும் சேவை நிறைவு நாள் நிகழ்விற்கு யாழ்ப்பாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ண பிரதம விருந்தினராக கலந்துகொண்டு நடமாடும் சேவை நிகழ்வுகளை நிறைவுசெய்தவைத்தார்.

அத்துடன் வதிரி பரமானந்த ஆச்சிரம மாணவர்கள் மத்தியில் பொலிஸாரினால் நடாத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் வெற்றிபெற்ற பாடசாலை மாணவர்களுக்கான பரிசில்களை யாழ்ப்பாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ண வழங்கிவைத்தார்.

இன்றைய நிகழ்வில் பருத்தித்துறை, நெல்லியடி மற்றும் வல்வெட்டித்தறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், கரவெட்டி பிரதேச செயலர் மற்றும் பொலிஸ் பொதுமக்கள் குழுவினரும் கலந்து கொண்டனர்.

jaffna-8 jaffna-7 jaffna-6 jaffna-5 jaffna-4 jaffna-3 jaffna-2 jaffna-1 jaffna