தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இஸ்ரேல் பயிற்சியளித்தது என்று மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய விஜித ஹேரத், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இஸ்ரேல் பயிற்சியளித்ததாக கூறினார்.
புலிகளுக்கு மட்டுமல்ல இலங்கை இராணுவத்துக்கும் இஸ்ரேலே பயிற்சியளித்தது.இருதரப்பினரையும் ஒரே இடத்தில் வைத்தே பயிற்சியளித்தது.
அது வெளிப்படையானதாகும்.
எனினும், இந்த விவகாரத்தை இஸ்ரேல் அரசாங்கமோ, இலங்கை அரசாங்கமோ அல்லது பயிற்சியளித்த மொசாக் அமைப்போ இதுவரையிலும் மறுத்ததில்லை என்று விஜித ஹேரத் தெரிவித்தார்.