மறைந்த மாதுலுவாவே சோபித தேரரின் மரணம் சந்தேகத்திற்குரியது என, முன்வைக்கப்பட்ட முறைப்பாடு குறித்த விசாரணைகளை நிறைவு செய்துள்ளதாக இரகசிய காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
உடுவே தம்மாலோக தேரர் குறித்த முறைப்பாட்டினை முன்வைத்திருந்தார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் அனில் ஜெயசிங்கவின் தலைமையிலான குழுவினர், இது குறித்து விசாரணைகளை முன்னெடுத்ததுடன், மீண்டும் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை எனவும் நீதிமன்றத்தில் தகவலளித்தனர்.
இதற்கமைய தமது விசாரணைகளை நிறைவு செய்து கொள்ள தீர்மானித்துள்ளதாக, இரகசிய காவல்துறையினர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே, வழக்கு விசாரணைகளை நிறைவு செய்ய முடிவு செய்துள்ளதாக, கொழும்பு பிரதம நீதவான் குறிப்பிட்டுள்ளார்.