தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர் என்று கூறப்படும் கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஐந்து கப்பல்களுக்கும் என்ன நடந்தது.
அந்தக் கப்பல்களை விற்பனை செய்திருந்தால் அந்த பணம் எங்கே என்று ஜே.வி.பியின் தலைவரும் எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவுமான அநுரகுமார திஸாநாயக்க, நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தொடர்பான குழுநிலை விவாதத்தின் போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.