கொழும்பு – உயர்நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று மாலை ஏற்பட்ட தீ விபத்து குறித்து விசாரணைகளை நடத்துவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் மூன்று குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.
உயர்நீதிமன்றத்தில் கட்டிடத்தில் இன்று மாலை பாரிய தீ பரவியிருந்தது. தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக 9 தீயணைப்பு வாகனங்கள் குறித்த பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தீயணைப்பு பிரிவினர் தெரிவிக்கின்றனர்.