சுகாதார ஊழியர்கள் 5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம்

291 0

ஒன்றிணைந்த சுகாதார ஊழியர்கள் 5அம்ச கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டமொன்றை இன்று (செவ்வாய்க்கிழமை), கொழும்பில் முன்னெடுக்கவுள்ளனர்

மேலும், தாங்கள் முன்வைத்த கோரிக்கைக்கு, அரசாங்கம் இதுவரை எந்ததொரு நடவடிக்கையும் முன்னெடுக்காதமையை கண்டித்தே இப்போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக சுகாதார ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபடவுள்ள  சுகாதார ஊழியர்கள் மேலும் கூறியுள்ளதாவது, “அனைத்து சுகாதார ஊழியர்களுக்கும் அவதான சேவைக்குறிய கொடுப்பனவை பெற்றுக்கொடுத்தல், மேலதிக சேவைநேரங்களுக்காக மாத சம்பளத்தை விஷேட கொடுப்பணவு உள்ளடக்கல் மற்றும் சீருடை கொடுப்பணவை 15ஆயிரம் ரூபாயாக மாற்றுதல் உள்ளிட்ட 5 கோரிக்கைகளை நாம் முன்வைத்துள்ளோம்.

மேலும், இவ்விடயம் தொடர்பாக பலமுறை சுகாதார அமைச்சுக்கு எடுத்துரைத்த போதிலும் எவ்விதமான தீர்வும் இதுவரை முன்வைக்கப்படவில்லை.

ஆகவேதான், போராட்டத்தின் ஊடாக எமது கோரிக்கைகளை வெற்றிக்கொள்ள தீர்மானித்துள்ளோம்.

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் அனைத்து சுகாதார ஊழியர்களும் மிகவும் அவதானத்துடனேயே பணிகளை முன்னெடுக்கின்றனர். ஆனால் அரசாங்கம் எமது பாதுகாப்பு குறித்து சிந்திக்கவில்லை.

எனவே தொழிற்சங்க நடவடிக்கைகள் ஊடாக அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இன்றைய ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது ” என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.