நாட்டில் சுற்றுச்சூழல் பாதிப்பு நாளாந்தம் மூன்று ஏக்கர் காடுகள் அகற்றப்படும் அளவுக்கு அதிகரித்துள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
மஹியங்கனையில் கட்சி செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், இந்த நிலங்கள் அகற்றப்பட்டு பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்கப்படுவதாக குற்றம் சாட்டினார்.
குறிப்பாக மஹா ஓயாவில் சமீபத்தில் 600 ஏக்கர் காடு அகற்றப்பட்டு அவை பன்னாட்டு நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைக்கப்பட உள்ளது என்றும் ருவான் விஜேவர்தன குறிப்பிட்டார்.
இதுபோன்ற செயல்களால் தற்போதைய அரசாங்கம் பின்னடைவை சந்தித்துள்ளது என குறிப்பிட்டுள்ள ருவான் விஜேவர்தன, விரைவில் ஐக்கிய தேசியக் கட்சி புதிய அரசியல் சக்தியாக மாறும் என்றும் தெரிவித்துள்ளார்.