யாழில் எறிகணைகள் மீட்பு

276 0

captureயாழ்ப்பாணம் தென்மராட்சி எழுதுமட்டுவாழ் பகுதியில் தனியாரின் விவசாயக் காணியொன்றில் இருந்து பெருந்தொகையான எறிகணைகள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த காணியில் விவசாய நடவடிக்கையை முன்னெடுக்கும் போதே எறிகணைகள் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

1996ஆம் ஆண்டு காலத்தில் இருந்து 2012ஆம் ஆண்டு வரை இப்பகுதி இராணுவ அதி உயர் பாதுகாப்பு வலயமாக காணப்பட்டது.

இதேவேளை 2012ஆம் ஆண்டு காலத்தில் இப்பகுதி விடுவிக்கப்பட்டு மக்களின் மீள் குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.