றகர் விளையாட்டு வீரர் வசிம் தாஜூடினின் மரணம் தொடர்பில், தனக்கு முன் பிணை வழங்குமாறு கோரி, கொழும்பின் முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகர தாக்கல் செய்த மீளாய்வு மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இன்று குறித்த மனு நீதிபதி பத்மினி என்.ரணவக்க முன்னிலையில் பரிசீலணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய ஜனவரி 10ம் திகதி ஆனந்த சமரசேகரவின் முன் பிணை கோரிய மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் முன் பிணை வழங்கக் கோரி கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தான் தாக்கல் செய்த மனுவை நிராகரித்துள்ளதாக, ஆனந்த சமரசேகர இதன்போது சுட்டிக்காட்டினார்.
இந்த தீர்ப்பு சட்டத்திற்கு முரணானது என கூறிய அவர், எனவே குறித்த தீர்ப்பை இரத்துச் செய்து தனக்கு முன் பிணை வழங்குமாறும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.