சிறிலங்காவில் மேலும் 356 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தொற்று கண்டறியப்பட்டவர்களில் 302 பேர் ஏற்கனவே தொற்று கண்டறியப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் ஏனைய 54 பேர் சிறைச்சாலைக் கொத்தணியைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 33 ஆயிரத்து 146ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று 516 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் இதுவரை 24 ஆயிரத்து 309 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.
இந்நிலையில், இன்னும் எட்டாயிரத்து 685 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இதேவேளை, இலங்கையில், கொரோனா தொற்றினால் இதுவரை 152 பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது