பேலிய கொட புதிய மெனிங் சந்தையில் 700க்கும் மேற்பட்ட கடைகள் இன்று மொத்த விற்பனை நடவடிக்கைகளுக்காகத் திறக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
1200 மொத்த விற்பனைக் கடைகளில் 768 கடைகள் இன்று திறக்கப்பட்டுள்ளன.
கடைகளைத் திறந்தவர்களுக்கு 50 வீத கழிவு வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதேவேளை புதிய சந்தையில் மாலை 4.00 மணி தொடக்கம் நள்ளிரவு 12.00 மணி வரை மொத்த வியாபாரம் நடைபெறும் என மெனிங் வர்த்தக சங்கத் தலைவர் லால் ஹெட்டிஜே முன்னதாகக் கூறியிருந்தார்.