2016-ம் ஆண்டின் செல்வாக்கான நபராக டொனால்ட் டிரம்ப் தேர்வு

294 0

201612072044251766_time-person-of-the-year-for-2016-is-presidentelect-donald_secvpf2016-ம் ஆண்டின் செல்வாக்கான நபராக அமெரிக்கா அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்பை டைம் இதழ் தேர்ந்தெடுத்துள்ளது.

அமெரிக்காவில் இருந்து வெளிவரும் பிரசித்தி பெற்ற இதழான டைம், 2016-ம் ஆண்டுக்கான செல்வாக்கான நபரை தேர்ந்தெடுக்கும் வகையில் கருத்துக்கணிப்பொன்றை நடத்தியது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜின்பிங், பிரிட்டன் பிரதமர் தெரசா மே, வட கொரிய அதிபர் கிம் ஜங் உன், எப்.பி.ஐ தலைவர் ஜேம்ஸ் கமே, ஆப்பிள் சி.ஈ.ஓ டிம் குக் உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் இந்த கருத்துக்கணிப்பு பட்டியலில் இடம் பெற்றிருந்தனர்.

இந்நிலையில் இதன் இறுதி முடிவை டைம் இதழ் இன்று அறிவித்துள்ளது. அதன்படி அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் 2016-ம் ஆண்டின் சிறந்த நபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்தலில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன் இந்த கருத்துக்கணிப்பில் 2-வது இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.