பாகிஸ்தானில் இந்திய உளவாளி?

306 0

201612080030138980_no-conclusive-evidence-on-alleged-indian-spy-kulbhushan_secvpfஇந்திய உளவாளி என்று பாகிஸ்தானால் குற்றம்சாட்டப்பட்ட குல்பூஷன் ஜாதவ் என்பவர் குறித்து அந்நாட்டு அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் பகுதியில் தீவிரவாத நடவடிக்கைகளை தூண்டி விட்டதாக இந்தியாவை சேர்ந்த குல்பூஷன் ஜாதவ் என்பவர் மீது அந்நாட்டு அரசு குற்றம்சாட்டியது.

உளவு பார்த்த குற்றச்சாட்டு தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்த பாகிஸ்தான் அரசு நேற்று அறிக்கை தாக்கல் செய்தது.

இந்நிலையில் பாகிஸ்தான் அரசு அறிக்கையில், குல்பூஷன் ஜாதவ் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக உறுதியான ஆதாரங்கள் இன்னும் கிடைக்கவில்லை என்று பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் வெளியுறவுத் துறை ஆலோசகர் சர்தாஜ் அஜிஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் சர்தாஜ் கூறியதாவது:-இதுவரை, இந்திய உளவாளி பாகிஸ்தானில் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக வெறும் அறிக்கை மட்டுமே நாங்கள் அளித்திருக்கிறோம். அதற்கு நிறைய ஆதாரங்கள் தேவை. அதனை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.

இந்தியாவின் உளவு அமைப்பான ராவை சேர்ந்த உளவாளி பாகிஸ்தானில் சதி வேலைகளில் ஈடுபட்டதாக ஐ.நாவின் அறிக்கை ஒன்றில் கூறப்பட்டு இருந்தது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.