“அடக்குமுறைக்கு உள்ளாகும் அனைத்து பல்லின மக்களின் ஒருங்கிணைந்த போராட்டமே வெற்றியளிக்கும்” பன்னாட்டு மனிதவுரிமை நாளை முன்னிட்டு யேர்மனியில் நடைபெற்ற போராட்டத்தில் தமிழ் பெண் செயற்பாட்டாளர்
பன்னாட்டு மனிதவுரிமை நாளை முன்னிட்டு நேற்றைய தினம் யேர்மன் கொல்ன் நகரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தேவாலயத்தின் முன்பாக 300 க்கும் மேலான பல்லின மக்கள் ஒன்றுகூடி குர்டிஸ்தான் மக்களுக்காகவும் மற்றும் உலகளாவிய ரீதியாக அடக்குமுறைக்கு முகம் கொடுக்கும் மக்களுக்காகவும் குரல்கொடுத்தனர்.
இவ் நிகழ்வில் தமிழ் மக்கள் சார்பாகவும் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தமது தோழமையை எடுத்துரைத்ததோடு மற்றும் சிறிலங்கா பேரினவாத அரசின் இன அழிப்பிற்கு உள்ளாகும் ஈழத்தமிழர்களின் நிலைமையையும் சுட்டிக்காட்டினார்கள்.
குர்டிஸ்தான் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக தமிழ் மக்கள் என்றும் தமது ஆதரவை நல்குவார்கள் என்றும் , அடக்குமுறைக்கு உள்ளாகும் அனைத்து பல்லின மக்களின் ஒருங்கிணைந்த போராட்டமே வெற்றியளிக்கும் எனவும் தமிழ் பெண் செயற்பாட்டாளர் தனது உரையில் வலியுறுத்தினார்.