“நினைவுகூருதல் என்பதன் பொருள் அதற்காக செயல்படுவதும் , போராடுவதும்”, நாடுகடத்தப்படுவதற்கு எதிராக யேர்மனி, ஹனோவரில் நடைபெற்ற பேரணி

689 0

“நினைவுகூருதல் என்பதன் பொருள் அதற்காக செயல்படுவதும் , போராடுவதும்”, நாடுகடத்தப்படுவதற்கு எதிராக யேர்மனி ஹனோவரில் நடைபெற்ற பேரணி

ஆறுமுகசாமி சுப்பிரமணியத்தின் மரணத்தின் 20 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, ஹனோவரில் இன்று மதியம் பேரணி ஒன்று நடைபெற்றது. இப் பேரணியை பல அமைப்புகளை கொண்ட “ஒருங்கிணைந்து முன்னோக்கி ” எனும் கூட்டணி தடுப்பு மையங்கள், சிறைச்சாலைகள் மற்றும் எல்லை ஆட்சிகளுக்கு எதிராக அழைப்பு விடுத்தது.

“சுதந்திரமாக விடுங்கள்”, சிறைச்சாலைகள், சுவர்கள், எல்லைகள் இல்லாத ஒரு உலகத்திற்கு! ” எனும் கருப்பொருளை அடிப்படையாக கொண்ட கூட்டணியின் அழைப்புக்கு 150 க்கும் மேலான மக்கள் பிரதான ரயில் நிலையத்தின் முன்னுள்ள சதுக்கத்தில் ஒன்றுகூடினர்.

நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டவர்கள் “அனைத்து நாடுகடத்தல்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்றும் , “சிறைச்சாலைகள் மற்றும் எல்லைகள் இல்லாத ஒரு சமூகத்தை” வலியுறுத்தியும், அத்தோடு ஆறுமுகசாமி சுப்பிரமணியத்தையும் மற்றும் எல்லை ஆட்சிகள் மற்றும் நாடுகடத்தல்களால் உயிர் இழந்த அனைவரையும் மறந்துவிடக் கூடாது என்றும் தமது உரைகளிலும், கோஷங்களிலும் பதாகைகள் மூலமாகவும் வலியுறுத்தினர்.

நடைபெற்ற பேரணியில் யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை சார்பாக உரையாற்றிய பெண் செயற்பாட் டாளர் ஒருவர் பின்வருமாறு ஆறுமுகசாமி சுப்பிரமணியத்தின் மரணத்தை நினைவுகூறினார்.

டிசம்பர் 8, 2000 அன்று, 17 வயதான தமிழ் இளைஞர் ஆறுமுகசாமி சுப்பிரமணியம் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவதைத் தவிர்ப்பதற்காக ஹனோவர்-லங்கன்ஹேகன் நகரில் அமைந்துள்ள நாடுகடத்தப்படுபவர்களுக்கான சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.

“20 ஆண்டுகளுக்கு முன்பு, ஆறுமுகசாமி சுப்பிரமணியம் தற்கொலை செய்து கொண்டபோது, ​​இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக சிறிலங்கா பேரினவாத அரசால் இனவழிப்பு போர் முன்னெடுக்கப்பட்டத.அன்றைய காலப்பகுதியில் தமிழ் பாதுகாப்பிற்காக தமிழீழ விடுதலைப் புலிகளால் தமிழீழ நிழல் அரசு நிறுவப்பட்டிருந்தது. அடக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், சாதி சமயம் அற்ற,ஆணாதிக்கத்திற்கு அப்பாற்பட்ட ஒரு சுதந்திரமான வாழ்க்கையை செயல்படுத்தவும் அது விரும்பியது. ஆனால் அன்றைய நாட்கள் தமிழ் மக்கள் தினசரி இலங்கை இராணுவத்தின் தாக்குதல்களுக்கு உள்ளானார்கள்.யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஒரு நாட்டிற்கு மக்களை நாடு கடத்துவது மனிதாபிமானமற்றது, அது இன்றும் நடைபெறுகின்றது ”

லாங்கன்ஹேகனில் கைது செய்யப்பட்டு நாடுகடத்தப்படுவதற்கு முன்பு, ஆறுமுகசாமி சுப்பிரமணியம் தனது அத்தை மற்றும் மாமா மற்றும் அவர்களது பிள்ளைகளுடன் வசித்து வந்தார். இருபது ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் அவரது மரணத்திற்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்றனர். துரதிர்ஷ்டவசமாக, அவர்கள் சனிக்கிழமை காலை தான் இன்றைய பேரணியைப் பற்றி அறிந்துகொண்டனர்.அதனால் பங்கேற்பாளர்களுக்கும் இப் பேரணியின் அமைப்பாளர்களுக்கும் தொலைபேசியில் தங்கள் விருப்பங்களையும் நன்றிகளையும் அனுப்பினார்கள்.

“நினைவுகூருதல் என்பதன் பொருள் அதற்காக செயல்படுவதும் , போராடுவதும்”
அதனால்தான் ஆறுமுகசாமி சுப்பிரமணியத்தின் நினைவை உயிரோடு வைத்திருக்க நாங்கள் உங்களுடன் இணைந்து போராடுகிறோம். ஒடுக்குமுறையிலிருந்து விடுபட்டு எங்கு மக்கள் வாழ விரும்புகின்றார்களோ, அதற்காக நாங்கள் போராடுகிறோம், ”என்று தனது உரையில் தமிழ் பிரதிநிதி தொடர்ந்தார்.

ஏனைய அமைப்புகளின் பிரதிநிதிகளும் தமது உரைகளில் நாடுகடத்தல்களுக்கு எதிரான கருத்துக்களையும் , நாடுகடத்தலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமது தோழமையையும் தெரிவித்தனர்.

https://anfdeutsch.com/aktuelles/kundgebung-gegen-abschiebehaft-in-hannover-23308