யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இருவர் காவல்துறையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னர், அங்கு கலகத்தைத் தடுப்பதற்காக இராணுவத்தினரை குவிப்பதற்கு முன்வைக்கப்பட்ட ஆலோசனையைத் தான் நிராகரித்ததாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பெருமிதப்பட்டார்.
யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த இந்த சம்பவத்தைப் போன்று தெற்கில் இடம்பெற்றிருந்தால் பாரியதொரு களேபரம் ஏற்பட்டிருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதத்தின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் பலியாகியிருந்ததால் நாங்கள் கவலையடைந்தோம்.
சிலவேளைகளில் இந்தச் சம்பவம் தெற்கில் நடந்திருந்தால் பாரதூரமான கபளேகரம் ஏற்பட்டிருக்கும். இச்சம்பவத்தின் பின்னர் இராணுவத்தினரை களமிறக்குவோமா எனக் கோரினர். எனினும் நான் அதனை நிராகரித்ததோடு, காவல்துறையினரைக் களமிறக்குவோம் எனத் தெரிவித்தேன் எனக் கூறினார்.