பாகிஸ்தான் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான வானுர்தி ஒன்று 48 பயணிகளுடன் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த வானுர்தி பாகிஸ்தானின் வடக்கு நகராண சிட்டால் நகரில் இருந்து புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் காணமல் போனதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த வானுர்தியுடனான தொடர்புகள் முற்று முழுதாக துண்டிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் வானுர்தி சேவையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிந்தி கிடைத்த தகவல்களின் படி 21 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.