எலான் மஸ்க்கின் கனவு திட்டத்துக்கு பின்னடைவு – வெடித்து சிதறிய ராக்கெட்

263 0

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அழைத்துச் செல்வதற்காக தயாரித்துள்ள பிரமாண்ட ராக்கெட்டான ஸ்டார்ஷிப் வெற்றிகரமான பரிசோதனைக்குப் பிறகு கீழே விழுந்து வெடித்துச் சிதறியது.

அமெரிக்காவில் பிரபல தொழில் அதிபர் எலான் மஸ்க்கின் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம், சோதனை விண்கலத்துடன் கூடிய ஸ்டார்ஷிப் ராக்கெட்டை டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள போகா சிகா ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தியது.
ஆனால் தனது சில நிமிட பயணத்தை முடித்துக் கொண்டு பூமிக்கு திரும்புகையில், இந்த ராக்கெட் தொழில்நுட்ப கோளாறில் வெடித்து தீப்பிழம்புகளுடன் கீழே விழுந்து எரிந்தது.
இது செவ்வாய் கிரகத்துக்கு மக்களை அழைத்துச்செல்ல வேண்டும் என்ற எலான் மஸ்க்கின் கனவு திட்டத்துக்கு பின்னடைவு ஆகும்.