உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பித்தனர் மனிங்சந்தை வர்த்தகர்கள்

261 0

கொழும்பு மனிங்சந்தை வர்த்தகர்கள் கொழும்பு புகையிரதநிலையத்திற்கு முன்பாக சாகும்வரை உண்ணாவிரதப்போரட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

பேலியகொடையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய சந்தை தொகுதியில் போதியளவு இடவசதிகள் செய்து தரப்படாமையை சுட்டிக்காட்டி இதற்கு தீர்வை காணகோரி மனிங்சந்தை வர்த்தகர்கள் உண்ணாவிரதப்போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர்.

பேலியகொட புதியசந்தை தொகுதியில் வழங்கப்பட்டுள்ள கடைகளின் அளவு மற்றும் எண்ணிக்கை தொடர்பில் பிரச்சினை உள்ளதாக தெரிவித்துள்ள நிமால் அத்தநாயக்க என்ற வர்த்தகர்750 மொத்தவியாபாரிகள் தங்களிற்கு இடத்தை கோருகின்றனர் ஆனால் 450 பேருக்கே கடைவசதிகள் வழங்கப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

பேலியகொடை புதிய வர்த்தக கட்டிட தொகுதிக்கு 7000 மில்லியன் செலவழிக்கப்பட்ட போதிலும் ஏன் உரிய வசதிகள் இல்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசியல் நோக்கங்களிற்காகவே இது உருவாக்கப்பட்டது என குறிப்பிட்டுள்ள அவர் ஜனாதிபதி இந்த விடயத்தில் உடனடியாக தலையிடவேண்டும்,எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.