ஹிஜாஸ் ஹிஸ்புல்லா சார்பில் சட்டத்தரணி ச்சலன பெரேரா தாக்கல் செய்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி அர்ஜூன் ஒபேசேகர மற்றும் யோஹித ராஜகருணா உள்ளிட்ட நீதிபதிகள் அடங்கிய குழு முன்னாள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன் போது தனிப்பட்ட காரணங்களுக்காக குறித்த மனு மீதான விசாரணைகளில் இருந்து விலகுவதாக மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி அர்ஜூன் ஒபேசேகர தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இந்த மனு எதிர்வரும் 14 ஆம் திகதி பிரியந்த பெர்னாண்டோ மற்றும் சோபிதா ராஜகருணா அடங்கிய நீதிபதிகள் குழு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தலைமை நீதிபதி அறிவித்தார்.
இவ்வாறு அறிவித்த நீதிமன்றம் பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் கடிதங்களை அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு மனுதாரர்களின் சட்டத்தரணிகளுக்கு உத்தரவிட்டது.
கடந்த செப்டம்பர் முதல் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவின் சட்டத்தரணிகளுக்கு அவரை சந்திக்க குற்றப்புலனாய்வு திணைக்களம் அனுமதியளிக்கவில்லை என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.