நாமக்கல் மண்டலத்தில் இன்று முட்டை விலை 15 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி இன்று முட்டை விலை ரூ.4.15 ஆக உள்ளது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனை கூட்டம் அதன் தலைவர் டாக்டர் செல்வராஜ் தலைமையில் நடந்தது. இதில் முட்டை விலை மாற்றம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
பிற மண்டலங்களில் தொடர்ந்து முட்டை விலை சரிவடைந்து வருவதாலும், பண்ணைகளில் முட்டைகள் தேக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் விலையில் தொடர்ச்சியாக மாற்றம் செய்ய தீர்மானிக்கப்பட்டது. இதை தொடர்ந்து முட்டை விலை கடந்த 2 நாட்களுக்கு முன்பு 20 காசுகள் குறைக்கப்பட்டு ரூ.4 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று முட்டை விலை 15 காசு உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி இன்று முட்டை விலை ரூ.4.15 ஆக உள்ளது. பிற மண்டலங்களில் முட்டை விலை விவரம் வருமாறு:
ஆமதாபாத் ரூ.3.63, பெங்களூரு ரூ.4.30, சென்னை ரூ.4.35, சித்தூர் ரூ.4.28, மும்பை ரூ.4.61, மைசூரு ரூ.4.32,
கடந்த மாதம் இதே நாளில் நாமக்கல்லில் முட்டை விலை ரூ.4.30 ஆகவும், கடந்த ஆண்டில் இதே நாளில் ரூ.4.16 ஆகவும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.