சிறைச்சாலை கொரோனா தொற்றாளர்களுக்கு விசேட சிகிச்சை மையங்களை அமைக்க தீர்மானம்

239 0

சிறைச்சாலையில் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களுக்கு விசேட சிகிச்சை மையங்களை அமைக்கத் தீர்மானம் .

சிறைச்சாலையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுக்காக இராணுவத்தின் பாதுகாப்பின் கீழ் யாழ்ப்பாணம், கந்தகாடு மற்றும் கல்லெல்ல ஆகிய பகுதி களில் கொரோனா சிகிச்சை மையங்களை அமைக்கத் தீர்மானித்துள்ளனர் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பு பகுதியில் அமைந்துள்ள 14 குடியிருப்பு களில் கொரோ தொற்று காரணமாகத் தனிமைப்படுத்தப்பட்டு ள்ள பகுதிகளை விரைவில் விடுப்பதற்கு எதிர் பார்த்திருப்பதாக அவர் தெரிவித்தார்.
அத்துடன் குடியிருப்புகளில் வசிக்கும் அனைத்து குடும் பங்களையும் உள்ளடக்கும் வகையில் பி.சி.ஆர் மற்றும் நேரடி ஆன்டிபாடி சோதனைகள் மேற் கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.
கடந்த இரண்டு வாரங்களில் கொழும்பு மாநகர சபைக் குட்பட்ட பகுதியில் புதிய கொ ரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதுள்ளமை தெரியவந்துள்ளது.