விபத்துக்களை தடுக்க விஷேட நடவடிக்கை

280 0

வீதி விபத்துக்களை தடுக்கும் முகமாக வாகனங்களுக்கு சமிக்கைகள் பொருத்தும் நடவடிக்கை புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவில் நேற்று (09) இடம்பெற்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் அதிகளவான வீதி விபத்துக்கள் இடம்பெற்று வருவதோடு உயிரிழப்புகள், காயங்கள் சொத்திளப்புக்களும் ஏற்பட்டு வருகின்ற நிலமையில் இவற்றை தடுக்கும் முகமாக விசேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன் ஒரு அங்கமாக முல்லைத்தீவில் அமைந்திருக்கின்ற அவலோன் தனியார் நிறுவனமும் முல்லைத்தீவு மாவட்ட செயலக மோட்டார் போக்குவரத்து பிரிவுவும் முல்லைத்தீவு மாவட்டத்தின் பொலிஸ் நிலையங்களும் இணைந்து வாகனங்களில் குறித்த சமிக்கை பொருத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக உழவு இயந்திரங்கள் வீதியில் பயணிக்கின்ற போது அதில் எந்த விதமான சமிக்ஞைகளும் தெரியாமல் இருக்கின்ற நிலையில் அதற்கு வீதியில் செல்லும்போது தெரியக்கூடிய வகையில் சமிக்கைகளை பொருத்த நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

உழவு இயந்திரத்தின் பெட்டிகளில் வெளிச்சம் படும் போது அது பட்டு தெறிப்படைந்து குறித்த வாகனம் முன்னே செல்கிறது என்பது தெரியக்கூடியவகையில் குறித்த உழவு இயந்திரத்தின் பெட்டியில் சமிக்ஞைகள் பொருத்தப்பட்டு வீதியில் ஏற்படுகின்ற விபத்துகளை தடுக்கும் முகமாக இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறிப்பாக உழவு இயந்திரங்களில் எந்தவிதமான சமிக்கைகளும் இல்லாத நிலையில் வீதி விபத்துக்களை குறைக்கும் முகமாக இந்த சமிக்கை பொருத்தும் நடவடிக்கை பலராலும் வரவேற்கப்படுகிறது.

குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் நிலையம் முள்ளியவளை பொலிஸ் நிலையம் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இருக்கின்ற ஒவ்வொரு பொலிஸ் நிலைய பிரிவிலும் தலா 50 க்கு மேற்பட்ட உழவு இயந்திரங்கள் இவ்வாறு அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நேற்றைய நாளில் (09) புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 50க்கும் மேற்பட்ட உழவு இயந்திரங்களுக்கு இவ்வாறு வீதி சமிக்ஞைகள் உழவு இயந்திரங்களில் பொருத்துகின்ற நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் உடைய பொலிஸார் அவர் நிறுவன ஊழியர்கள் மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஊழியர்கள் இணைந்து இந்த செயல திட்டத்தை முன்னெடுத்து வந்தனர்.