பண்டிகை காலங்களில் பொதுமக்கள் பின்பற்ற வேண் டிய வழிகாட்டுதல்கள் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.
சுகாதார பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன வழி காட்டுதல்களை வெளியிட்டு, பண்டிகை காலங்களில் கொரோனா தொற்று வைரஸ் பரவாமல் தடுக்கும் பொரு ட்டு அவற்றைப் பின்பற்றுமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.
பண்டிகை காலங்களில் பயணத்தைக் குறைக்கப் பொது மக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளது.
குடும்பத்தில் ஒருவர் மாத்திரம் வர்த்தக நடவடிக்கைக ளில் ஈடுபடுவதை உறுதி செய்யவும்.
அருகிலுள்ள வர்த்தக நிலையங்களிலிருந்து பொருட் களைக் கொள்வனவு செய்ய வேண்டும்.
பண்டிகை காலங்களில் குடும்பம் அல்லது நட்பு கூட்டங் களிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்பதுடன், அத்த கைய கூட்டங்களை உடனடி குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுப்படுத்தவும்.
பண்டிகை காலத்திற்காக ஏனையவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும்போது உடல் ரீதியான தொடர்பிலிருந்து விலகி இருக்கவும், அனைத்து நேரங்களிலும் சமூக தூரத்தைப் பராமரிக்கவும்.
வயதானவர்கள் வேகமாக நோய்த்தொற்றுக்கு ஆளாக நேரிடும் என்று கூறிய சுகாதார பணிப்பாளர், குடும்பங் கள் தங்கள் குடும்பத்தில் உள்ள பெரியவர்களைப் பெரிய கூட்டத்திற்கு வெளிப்படுத்து வதைத் தவிர்க்கவும், இந்த காலகட்டத்தில் வெளிநபர்களின் வருகையை மட்டுப் படுத்தவும்.
தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக, பொது இடங் களில் சமூக தூரத்தைப் பராமரிக்கத் தவறும் நபர்களுக்கு அல்லது சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றத் தவறும் நபர்களுக்கு சமூக இடை வெளியைப் பின்பற்றுமாறு வலியுறுத்தப் பொதுமக்களுக்கு உரிமை உண்டு.
பண்டிகை காலங்களில் பொருட்களை வாங்குவதற்குக் கிடைக்கக்கூடிய ஒன்லைன் விநியோக சேவைகளைப் பயன்படுத்தவும் பொதுமக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த காலகட்டத்தில் வெளிச் செல்லும்போது முகக் கவ சம் அணியவும், சமூக தூரத்தைப் பராமரிக்கவும், தொடர்ந்து கைகளைக் கழுவவும் அல்லது சுத்தப்படுத் தவும்.