உரிமை கோரப்படாத உடல்களை உடனடியாக தகனம்செய்ய நடவடிக்கை!

230 0

கொரோனா தொற்றினால் மரணித்து உறவினர்களால் உரிமை கோரப்படாத உடல்களை உடனடியாக தகனம்செய்ய நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் முன்வைத்த கோரிக்கையை ஆராய்ந்த சட்டமா அதிபர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.

சட்டமா அதிபரின் இணைப்பு அதிகாரி அரச சட்டவாதி நிஷாரா ஜயரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

கொவிட் 19 நோயினால் மரணித்து உறவினர்களால் பொறுப்பேற்கப்படாத சுமார் 19 சடலங்கள் நாட்டின் பல வைத்தியசாலைகளின் பிரேத அறைகளில் வைக்கப்பட்டுள்ளன.

இதன்படி, இலங்கையின் அரசியலமைப்பில் தனிமைப்படுத்தல் சட்டத்துக்கு அமைவாக, உரிமைக்கோரப்படாதுள்ள சடலங்களை தகனம் செய்ய முடியும் என, சட்ட மாதிபர் சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு அறிவுறுத்தியுள்ளார்.