இலங்கை இந்திய கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நோர்வேயின் நிறுவனம் ஒன்றின் நிதி பங்களிப்புடன் இந்த கப்பல் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன் முதல் கட்டமாக கொழும்பில் இருந்து தமிழ் நாட்டின் தூத்துக்குடிக்கான கப்பல் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.
அதனைத் தொடர்ந்து தலைமன்னாருக்கும், ராமேஸ்வரத்துக்கும் இடையிலான கப்பல் சேவை ஆரம்பிக்கப்படுவதுடன், பின்னர் கொழும்பு – தூத்துக்குடி கப்பல் சேவையை கேரளாவின் கொச்சி துறைமுகம் வரையிலும் நீடிக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்பாடுகள் கேள்விகளின் அடிப்படையிலேயே இடம்பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.