இலங்கையில் இனி ஆயுத போராட்டம் ஏற்படாது – சித்தார்தன்

320 0

sithadthan-720x480நாட்டில் மீண்டும் ஆயுதப் போராட்டம் ஒன்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்தன் தெரிவித்துள்ளார்.

ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் இதனைக் கூறியுள்ளார்.

வடக்கு கிழக்கில் அண்மையில் யுத்தத்தினால் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் நிகழ்வுகள் நடத்தப்பட்டிருந்தன.

இதன் ஊடாக மற்றுமொரு ஆயுதப் போராட்டம் தொடக்கப்படும் என்ற கருத்தை ஏற்றுக் கொள்ளப்பட முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.