உக்குவளையில் சட்ட விரோத சிறுநீரக விற்பனை

304 0

cttttமாத்தளை – உக்குவளை பகுதியில் உள்ள தோட்டப்புறங்களைப் பயன்படுத்தி சட்டவிரோத சிறுநீரக வியாபாரம் இடம்பெற்று வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வறிய நிலைமையை பயன்படுத்தி, முகவர்கள் சிலரால் இந்த வர்த்தகம் மேற்கொள்ளப்படுகிறது.

கடன் சுமை மற்றும் வறுமையில் இருந்து விடுபடுவதற்காக பொது மக்கள் சிறிய அளவான தொகைக்காக தங்களின் சிறுநீரகங்களை விற்பனை செய்ய முன்வருவதாக கூறப்படுகிறது.

இவ்வாறானவர்களை அடையாளம் கண்டு, சிறுநீரகத் தொகுதி அவசியப்படுகின்றவர்களுக்கு அறிமுகப்படுத்தி, வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று அவர்களின் சிறுநீரகம் விற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுகிறது.