எட்காவால் பாதிப்பில்லை – எஸ்.பி. திஸாநாயக்க

293 0

sb-dissanayake-720x480எட்கா உடன்படிக்கையினால் இலங்கையின் பொருளாதாரத்துக்கு எந்தபாதிப்பும் ஏற்படாது என்று அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் தொழில்நுட்பஒத்துழைப்பு உடன்படிக்கையான எட்காவினால், இலங்கையின் பொருளாதாரத்துக்கும், தொழில் மற்றும் சேவைத் துறையிலும் கடுமையான பாதிப்புகள் ஏற்படும் என்று குற்றம் சுமத்தப்படுகிறது.

எனினும் இதனை அமைச்சர் மறுத்துள்ளார்.

இந்தியா ஒருபோதும் இலங்கையில் இருந்து பொருளாதார லாபத்தை தேடிக் கொள்ள முயற்சிக்கவில்லை.

பிராந்திய ரீதியானபாதுகாப்பு மற்றும் தலைமைத்துவத்தையே இந்திய எதிர்பார்க்கிறது.

இதனை நாம் வழங்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

அதேநேரம் இலங்கையில் முச்சக்கர வண்டிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன், பல இளைஞர்கள் முச்சக்கர வண்டியை செலுத்துவதையே தங்களின் கனவாக கொண்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது மிகவும் பாதகமான விடயம்.

இளைஞர்கள் அதிக உற்பத்தி திறனைக் கொண்டவர்கள்.

ஆனால் அவர்கள் முச்சக்கரவண்டியை செலுத்த ஆர்வம் கொண்டு அதனை தெரிவு செய்வதால், சுமார் 80 சதவீதமான நேரத்தை அவர்கள் வீணே கழிக்கின்றனர்.

எனவே புதிய தொழில்வாய்ப்புகளை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சி எடுத்து வருகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.