வவுனியாவில் அபிவிருத்தி உத்தியோகத்தர் தாக்கப்பட்டதை கண்டித்து நெடுங்கேணி பிரதேச செயலகத்தின் ஊழியர்கள் இன்றையதினம் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.
வவுனியா வடக்கு பிரதேச செயலத்திற்குட்பட்ட புளியங்குளம் தெற்கு கிராம அலுவலர் பிரிவில் கடமையாற்றுகின்ற அபிவிருத்தி உத்தியோகத்தர் கடந்த வெள்ளிக்கிழமை கிராமவாசி ஒருவரால் தாக்கப்பட்டதை கண்டித்தும் சட்ட நடவடிக்கை எடுக்கக்கோரியும் இன்று நெடுங்கேணி பிரதேச செயலகத்தின் ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.
காலை 8.30 மணி தொடக்கம் நெங்கேணி பிரதேச செயலாளர் பா.பரந்தாமன் தலைமையில் பணி பகிஸ்கரிப்பு இடம்பெற்றது.
குறித்த பிரதேச செயலக ஊழியர்களால் பிரதேசசெயலகத்தின் வாயில் மூடப்பட்டு பணி பகிஸ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது.
இந்நிலையில் பணிப்பகிஸ்கரிப்பை கைவிடுமாறும், அபிவிருத்தி உத்தியோகத்தரை தாக்கிய கிராமவாசியை கைதுசெய்வதாகவும் நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி பிரதேச செயலருக்கு வழங்கிய வாக்குறுதியை அடுத்து பணிப்பகிஸ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.