அத்திலாந்திக் மாகாணங்களின்வளர்ச்சிக்காக குடிவரவை ஊக்குவிக்கவும் திட்டம்

512 0

the-four-atlantic-premiers-are-in-p-e-i-today-450x253அத்திலாந்திக் மாகாணங்களின் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டும் வண்ணமும்  அங்கே வேலைவாய்ப்புக்களை அதிகரிக்கும் வண்ணமும், அபிவிருத்திக்கான ஒரு புதிய செயற்றிட்டத்தை உருவாக்க மத்திய அரசு, நான்கு  அத்திலாந்திக் மாகாணங்களின் முதல்வர்களுடன் இணைந்து செயலாற்றத் தீர்மானித்துள்ளது.

Prince Edward Island இல்  நான்கு  அத்திலாந்திக் மாகாணங்களின் முதல்வர்களும், பல மத்திய அரசின் அமைச்சர்களும் கலந்துகொண்ட மாநாடு ஒன்றின் நிறைவில்,  திங்களன்று இடம்பெற்ற  ஊடகப் பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போது இவ்வறிவித்தல் இடம்பெற்றது.

பல்லாயிரக்கணக்கான புதிய குடிவரவாளர்களை இப்பிராந்தியத்திற்குள் அழைத்துவரும் பொருட்டு செயற்படுத்தப்படவுள்ள ஒரு 3 ஆண்டு முன்னோடி நிகழ்சித்திட்டம், இவ் வளர்ச்சிச் செயற்றிட்டத்தின் ஒரு பிரதான அம்சமாகும்.

Leave a comment