அமைச்சரவை அமைச்சர்கள் எடுத்த தீர்மானத்தின்படி சாரதி அனுமதிப்பத்திரம், வாகன இலக்கத்தகடு என்பவற்றின் விநியோகம் தபால் திணைக்களத்தால் செயற்படுத்தப்படும் விரைவு தபால் கூரியர் சேவையூடாக முன்னெடுக்கப்படவுள்ளது.
பதிவுத்தபால் வழியாக சாரதி அனுமதிப்பத்திரத்தை அனுப்புவதில் ஏற்படும் தாமதத்தை கருத்தில் கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் வாடிக்கையாளர்களின் வருகையைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தையும் கொண்டுள்ளது.
இந்தச் சேவையினூடாக வாடிக்கையாளர்கள் வாகன இலக்கத்தகடுகள், வாகன பதிவுச் சான்றிதழ் என்பவற்றையும் தமது வீடுகளுக்கே பெற்றுக்கொள்ள முடியும்.
ஒரு வாகனத்தைப் பதிவு செய்யும் போது வாடிக்கையாளர் அதிக நேரத்தையும் பணத்தையும் செலவு செய்து திணைக்களத்துக்கு வர வேண்டியுள்ளது. இவ்விரயம் மேற்படி சேவை மூலம் தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கலாம்.