வன்னியர் இடஒதுக்கீடு போராட்டம் – பெருங்களத்தூரில் 2 கி.மீ தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்

288 0

வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கக்கோரி பாமக சார்பில் சென்னையில் இன்று போராட்டம் நடைபெற்றும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

தமிழக அரசு வேலையில் வன்னியர்களுக்கு 20 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் உள்ள தமிழ்நாடு தேர்வாணையம் முன்பு பாமக சார்பில் இன்று போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த போராட்டத்தில் பங்கேற்றும் நோக்கத்தோடு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பாமக தொண்டர்களும் கட்சி நிர்வாகிகளும் சென்னை நோக்கி கார் உள்பட பல்வேறு வாகனங்களில் சென்னை நோக்கி வந்தனர்.
அவர்களை சென்னை எல்லையான பெருங்களத்தூர் சோதனைச்சாவடியில் போலீசார் தடுத்து நிறுத்தினர். மேலும், பாமகவை சேர்ந்த சில முக்கிய நிர்வாகிகள் மட்டுமே சென்னைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். எஞ்சிய பாமக கட்சி தொண்டர்களை திருப்பி அனுப்பும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால், தங்களையும் சென்னைக்குள் செல்ல அனுமதிக்கக்கோரி பாமக கட்சி தொண்டர்கள் பெருங்களத்தூர்- ஜிஎஸ்டி நெடுச்சாலையின் இரு புறமும் திரண்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட தொடங்கினர்.
இதனால் பெருங்களத்தூரில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவருகிறது. ஜிஎஸ்டி சாலை முழுவது பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் அலுவலகம் செல்வோர் உள்பட பலரும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுவருபவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்தால் பெருங்களத்தூர்-ஜிஎஸ்டி சாலையில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.