உலகின் மிகப்பெரிய நத்தார் மரம் நியமிக்கப்படாது-ஏற்பாட்டுக்குழு

417 0

x-mass-treeகர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையின் அறிவுறுத்தலுக்கு மதிப்பளித்து காலிமுகத் திடலில் நிர்மாணிக்கபடுகின்ற உலகின் மிக பெரிய நத்தார் மரத்தை நிர்மாணிக்கும் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க ஏற்பாட்டு குழுவிற்கு அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடாத்தியுள்ள உலகின் மிக பெரிய நத்தார் மரத்தை நிர்மாணிக்கும் ஏற்பாட்டுக் குழு தலைவர் மங்கள குணசேகர,
அதி உன்னத மல்கம் கர்தினால் ரஞ்சித் அடிகளாரின் வழிகாட்டல்களை சிரந்தாழ்த்தி ஏற்றுக்கொண்டு அதன் பொருட்டு நடவடிக்கையெடுக்கிறோம்.
பிரதான ஐந்து காரணிகளை அடிப்படையாகக் கொண்டு நாம் இந்நத்தார் மர நிர்மாணப்பணிகளை ஆரம்பித்தோம்.
முதலாவது மதங்களுக்கிடையே ஒற்றுமைய ஏற்படுத்தல் மற்றும் சமாதானத்தை நிலைநாட்டுதல். இன்று எங்கள் நாட்டில் சமாதானம் நிலைநாட்டப்பட்டுள்ளது. இதனை உலகிற்கு அறிவிக்கும் தேவை எமக்கிருந்தது. இரண்டாம் காரணி யாதெனில் கின்னஸ் சாதனை படைத்து இந்நாட்டின் புகழை ஓங்கச் செய்வதாகும். கின்னஸ் சாதனையை படைப்பதன் மூலமாக இந்நாட்டின் புகழ் மென்மேலும் அதிகரிக்குமென நாங்கள் நம்பினோம். மூன்றாம் காரணியாதெனில் சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகும். எதிர்வரும் விடுமுறை நாட்களில் பெருந்தொகையான மக்கள் நத்தார் மரத்தை பார்வையிட வருகைத்தருவார்களென எண்ணினோம். நான்காவது சமூக சேவை. நத்தார் மர செயற்றிட்டத்துடன் இணைந்த வகையில் சிறுநீரக நோயாளிகளுக்கு உதவிகளை வழங்குவதற்கும் ஏழை குழந்தைகளிற்கு பரிசில்களை வழங்குவதற்கும் நாம் திட்டங்கள் வகுத்திருந்தோம்.
எங்களுடைய கலைநயமான நிர்மாண திறனை உலகிற்கு எடுத்தியம்புவதே எம்முடைய இறுதி எதிர்பார்பாக இருந்தது.
உலகின் மிக பெரிய நத்தார் மரத்தின் நிர்மாணப்பணிகளை இலங்கை துறைமுக அதிகார சபையின் பாரவூர்தி சாரதிகளே ஆரம்பித்தார்கள். தொழில்நுட்ப பிரச்சினைகள் காரணமாக கடந்த 12 ஆண்டுகளாக இவ்வூழியர்களுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டிருக்கவில்லை. கப்பற்துறைமுகங்கள் அமைச்சரின் தலையீட்டினால் அமைச்சரவையின் அனுமதியுடன் இந்நபர்களுக்கு நிரந்தர நியமணங்கள் வழங்கப்பட்டது. இவர்கள் மக்கள் தினத்தில் அமைச்சரை சந்திக்கும் பொருட்டு வருகைத்தந்து தங்களுடைய கோரிக்கையை முன்வைத்தார்கள். அமைச்சரின் ஆசீர்வாதத்துடனேயே இத்திட்டத்தை ஆரம்பித்தார்கள். இந்நத்தார் மரம் தொடர்பாக பல்வேறுப்பட்ட போலியான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றது. இவற்றை தெளிவுப்படுத்த வேண்டிய தேவையுள்ளது. நாம் ஒரு போதும் இலங்கை துறைமுக அதிகார சபையின் பணத்தை எந்தவொரு சந்தர்பத்திலும் இச்செயற்பாட்டின் பொருட்டு செலவழிக்கவில்லை. இவ் லொறி சாரதிகள் தங்களுடைய பணி நேரத்தை தவிர்த்த மேலதிக நேரத்திலேயே இந்நிர்மாணப்பணிகளில் பங்குக்கொண்டார்கள். இதற்கு மேலதிகமாக பெருந்தொகையான தன்னார்வலர்கள் உதவிகளை வழங்கினார்கள். நாம் எச்சந்தர்பத்திலும் பணம் சேர்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை. பொருள் ரீதியான நன்கொடைகளையே பெற்றுக் கொண்டோம். சிங்கள தமிழ் முஸ்லீம் வேறுப்பாடுகளின்றி பல்வேறுப்பட்டவர்கள் இதன் பொருட்டு உதவிகளை வழங்கினார்கள். நாம் பௌத்த மதத்தை சார்ந்தவர்கள். எம்மிடம் மத பேதங்கள் இல்லை. நாம் முஸ்லீம் மத வேலைதிட்டங்களை முன்னெடுத்தோம். பௌத்த மத நிகழ்வுகளை முன்னெடுத்தோம். நத்தார் மரத்தை நிர்மாணித்து நத்தார் வலயமொன்றை ஏற்படுத்துவதே எங்களுடைய எதிர்பார்ப்பாகும். இச்செயற்பாட்டின் பொருட்டு ஆசீர்வாதத்தை வேண்டி கர்தினாலுக்கு எழுத்து மூலம் அறிவித்தோம். நத்தார் மர நிர்மாணபணிகளின் ஆரம்ப நிகழ்விற்கு அருட்தந்தையொருவரும் வருகைத்தந்திருந்தார். ஆசீர்வாதம் வழங்கினார். எது எவ்வாறாயினும் தற்சமயம் கர்தினால் அவர்கள் பகிரங்க அறிவுரை வழங்கியுள்ளார். அவரது வழிக்காட்டலுக்கு மதிப்பளித்து நத்தார் மர நிர்மாணப்பணிகளை நிறுத்துமாறு அமைச்சர் அர்ஜூன ரணதுங்க அறிவித்தார். அதற்கிணங்க இந்நிர்மாணப்பணிகள் நிறுத்தப்படுமென்பதை நத்தார் மர நிர்மாணப்பணிகள் குழுவின் தலைவர் சார்பாக நான் தெரிவிக்கின்றேன். என்று குறிப்பிட்டுள்ளார்.

x-mass-tree-2 x-mass-tree x-mass-tree-1