சுவீடனில் இரவு நேரத்தில் ஊதா நிறத்திற்கு மாறும் வானம்! ஏன் தெரியுமா?

352 0

சுவீடனில் கிஸ்லோ எனும் பகுதியில்  தக்காளித் தோட்டமொன்றின் உரிமையாளரொருவர் தன்னுடைய தோட்டத்தில் மின்சாரத்தை சேமிக்கும் வகையில் பெரிய எல்.ஈ.டி அமைப்பொன்றை நிறுவியுள்ளார்.

இந்த அமைப்பு அளவில் பெரிதாக இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆற்றல் மிக்க அந்த லைட்டிங் அமைப்புகள் இரவு நேரத்தில் இருட்டாக இருக்கும் வானத்தை தனது ஒளிச்சிதறல் மூலமாக ஊதா நிறத்திற்கு மாற்றி விடுகிறது.

இதன் காரணமாக இரவு நேரத்தில் எப்போதும் இருட்டாக இருக்கும் வானம் திடீரென்று ஊதா நிறத்திற்கு மாறி காட்சியளிக்கின்றது.

எனினும் இதனையறியாத அப்பகுதி மக்கள் வானம் திடீரென்று ஊதா நிறத்திற்கு மாறுவதால்  பீதி அடைந்து பொலிஸாரின் உதவியை நாடியதாகக் கூறப்படுகிறது.

குழந்தைகள் இதை ரசித்தாலும் சிலர் பயந்து கொண்டு அலறுவதால் அதிகாலை 5-11 மணி வரை லைட்டினிங் அமைப்பு நிறுத்தி வைப்பதாக குறித்த தோட்டத்தின் உரிமையாளர் உத்தரவாதம் கொடுத்துள்ளார்.

மேலும் எதிர்காலத்தில் இந்த குறைபாடு சரிசெய்யப்பட்டு ஒட்டுமொத்த பண்ணையிலும் மின்சாரம் சேமித்து வைக்கப்படும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.