மறைந்த தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஜெயராமிற்கு, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அஞ்சலி செலுத்தினார்.
இந்தியா தமிழகத்தின் மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஜெயராமின் மறைவையொட்டி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு யாழ்பாணத்தில் அமைந்துள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கலந்து கொண்டு அமரத்துவம் அடைந்த முதலமைச்சருக்கு அஞ்சலி செலுத்தினார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த முதலமைச்சர் தெரிவிக்கையில், இந்த இழப்பு தமிழ் மக்களுக்கு பெரும் இழப்பு என்பதுடன் இதனை நிவர்த்தி செய்ய முடியாது என்றும் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தார்.