கொரோனா வைரஸ் தொற்றை கண்டறியும் பி.சி.ஆர்.பரிசோதனையை அடுத்த மாதம் முதல் மேலும் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக இராசாயன சேவைகள் பிரதி சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஆர்.எம்.எஸ்.ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “நாட்டில் நாளாந்தம் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர்.பரிசோதனைகளின் எண்ணிக்கை அடுத்த மாதம் முதல் 20 ஆயிரமாக அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், கொரோனா தொற்றைக் கண்டறிவதற்காக Rapid Antigen பரிசோதனையும் நாட்டில் தற்போது முன்னெடுக்கப்படுகின்றது.
இதேவேளை, கொரோனா தடுப்புசிகளை வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரும் விடயம் தொடர்பில் பரிந்துரைகளை முன்வைக்க, மூன்று குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன” என அவர் குறிப்பிட்டுள்ளார்.