காங்கேசன்துறை கடலில் குளித்த இருவர் அலையில் அடித்துச் சென்ற நிலையில், ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக தெரிவித்த பொலிஸார், மற்றையவர் தொடர்பில் தகவல் கிடைக்கவில்லை என்றனர்.
காங்கேசன்துறை தல்செவன இராணுவ நட்சத்திர விடுதிக்கு அருகாமையில் நேற்று (29) பிற்பகல் ஒரு மணியளவில் கடலில் குளித்துக்கொண்டிருந்த இரண்டு பேர் அலையில் அடித்துச் செல்லப்பட்டனர்.
தையிட்டியைச் சேர்ந்த சிவச்சந்திரன் நிரோஜன் (வயது -19), மாசிலாமணி தவச்செல்வம் (வயது -19) என்ற இருவருமே கடலலையில் அடித்துச் செல்லப்பட்டனர்.
அவர்களில் சிவச்சந்திரன் நிரோஜன் என்பவர், சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்தனர்